Posts

Image
 15.05.2021 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியாகும் 'தீம்புனல்" வாராந்த பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை: கோவிட்-19 பேரவலமும் பிள்ளைகளின் சமூகமயமாக்கலிலான தேக்கநிலையும்: மாற்றுகளைத் தேடுதல் குறித்த கருத்தாடலுக்கான அவசியம்                                                                                                             இ.இராஜேஸ்கண்ணன் கோவிட்-19 பேரவலம் மனிதனது வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியபடி தொடர்கிறது. நவீனத்துவத்தின் கனிநுகர் காலத்தின் பின்னான உலகத்தின் எழுச்சிமிக்க சூழலில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு அம்சங்களில் கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடரவுள்ள காலத்தின் ஒழுங்கை மாற்றியமைத்துள்ளது. பல்வேறு துறைகளினதும் எதிர்காலவியல் நோக்கையே புரட்டிப்போட்டுள்ள இன்றைய உலகளாவிய நிலவரம் கல்வியிலும் பாரிய மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. எதிர்காலத்துச் செல்நெறியை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு சமூகத்தைத் திட்டமிட்டு வழிநடத்துவதில் பெரும்பங்காற்றுவது கல்வி. கல்வியின் நோக்கு, இலக்கு, பாட உள்ளடக்கம், பயிற்று முறைகள், பங்காளித்த

கிராமியப் பெண்களின் பாரம்பரியத் தொழில்களில் உட்பொதிந்த பெண்கள் வலுவூட்டலுக்கான சுய உதவிக்குழுக்களின் பண்புகள்.

Image
சமுதாய அபிவிருத்திச் செயன்முறைகள் தொடர்பான இன்றைய சிந்தனைகளில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக அதிக சிரத்தைகொள்ளப்படுகின்றது. கிராமிய சமுதாயங்களில் ஏற்படவேண்டிய அபி விருத்திச் செயன்முறையின் பிரதான பங்குதாரர்களாக பெண்கள் விளங்கவேண்டியதன் அவசியத்தினை சகலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர். இதற்காக கிராமிய சமுதாயங்களில் உள்ள பெண்களை வலுவூட்டும் வகையில் சுயஉதவிக் குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. கிராமிய அபிவிருத்தியில் பெண்களின் பங்கு குறித்து சமுதாய அபிவிருத்திச் சிந்தனையாளர்கள் கரிசனை கொண்டுள்ளனர். இவர்கள் மகளிர் மேம்பாடு, மகளிர் பங்கேற்புடன் கூடிய மேம்பாடு, மகளிர் வலுவூட்டல் முதலிய பல எண்ணக்கருக்கள் தொடர்பான செயல்நிலை விளக்கங்களைத் தருகின்றனர். இவற்றை உறுதிப்படுத்துவதற்குக் கிராமிய மட்டத்தில் வலுப்பெறவேண்டிய அமைப்பாகச் 'சுயஉதவிக் குழுக்கள்" சீர்மையாக அமைக்கப்படுதல் வேண்டும் என்பது இவர்களின் ஆலோசனை. ஒழுங்கமைந்த ஒரு பெண்கள் சுயஉதவிக்குழுவானது கிராமியப் பெண்களின் ஒன்றுகூடல், ஒத்துழைத்தல், ஒருமைப்பாடு, தீர்மானமெடுத்தல், பிரச்சினைகளை விவாதித்தல், தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் உள அழுத்தங்க

கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்: கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும்

Image
கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்:  கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும் இ.இராஜேஸ்கண்ணன் கோவிட்-19 பேரவலத்தின் விளைவுகள் உலகளாவிய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களையும் பாதித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா வைரசின் பாதிப்பை உயிரியல் வயதின் அடிப்படையில் விளக்கினர். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களைப் பாதிக்கும் என்றும், அவர்களிடையே உயிரிழப்புகள் உயர்வாயிருக்கும் என்றும் முன்னர் தரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்துக்கள் இப்போது மாறியுள்ளன. பல்வேறு வயதுப் பிரிவினரும் உலகளாவிய ரீதியில் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். கோவிட்-19 இளைஞர்கள் மீது செலுத்திவரும் தாக்கம் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கது.  வெறுமனே உயிரியல் ரீதியாக மாத்திரம் அதன் தாக்கத்தை பார்க்காது, இன்று அதன் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியாக பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகளும் கருத்தாடல்களும் நடைபெற்றுவருகின்றன. இளைஞர்கள் சமூகத்தின்மீது கோவிட்-19இன் தாக்கம் குறித்து தனியான கவனம் தேவைப்படுகின்றது. ஏனெனில், எதிர்கால சமூகத்தில் முதிர்வகிபங்குகளை எடுக்கவுள்ள இன்றைய இளைஞர்கள் மீதான கோவிட்-19இன் தாக்கத்தை